இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. அதேவேளையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும், புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கவும் மத்திய மாநில அரசுகள் பல் வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், திமுக எம்.பி. திருச்சி சிவா, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இது குறித்து கடித்தம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரத்தை உங்கள் பார்வைக்கு எடுத்துவருகிறேன். இதன் மீது உரிய பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும்.
எனது சொந்த ஊரான திருச்சியில் அமைந்துள்ள ‘பெல்’ நிறுவனத்தில், மூன்று ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு 140 மெட்ரிக் கியூப் அளவு உற்பத்தி செய்யக்கூடியது. ஆனால், இவை கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்படாமல் உள்ளது. ஆனால், தொழில்நுட்ப வல்லூநர்கள், நீர் குளிரூட்டி, கம்பரஸர் உள்ளிட்ட ஆறு தடைகளை பராமரித்து மீண்டும் செயல்பட வைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
Letter to Hon. Minister @PrakashJavdekar pic.twitter.com/j7X28Engvc
— Tiruchi Siva (@tiruchisiva) April 26, 2021
மேற்குறிப்பிட்டவையை சரிசெய்தால் குறைந்தது 15 முதல் 20 நாட்களக்குள்ளாக இதில் ஆக்ஸிஜன் உற்பத்தியை துவங்க முடியும். இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களை காக்க முடியும். இதனை நீங்கள் உரிய முறையில் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.