மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அவரது வாக்கை பதிவு செய்தார்.

வாக்குசாவடிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சமின்மை, வாக்குப்பதிவு இயந்திரத்தை பொருத்துவதில் தாமதம் என தேர்தல் ஆணையம் மீது குறைபாடுகள் உள்ளது. இதை எல்லாம் சரி செய்யாமல் தேர்தல் ஆணையம் எதிர்க் கட்சி வேட்பாளர், தலைவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவதில் காட்டும் அக்கரையை வாக்குச்சாவடிகளில் காட்டியிருந்தால் இது போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு இருக்காது. மதச்சார்பற்ற முற்போக்கு அணி வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.