Skip to main content

முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே விறுவிறுவென வெளியேறிய ஆளுநர் ஆர்.என். ரவி

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 Tamil Nadu Chief Minister's speech; Governor R. N. Ravi left in a hurry

 

இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.

 

உரையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக 'திராவிட மாடல்' என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துள்ளார். அதேபோல் 'தமிழ்நாடு கவர்ட்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். இதனை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஆளுநர் தனது உரையைத் தொடர்ந்தார்.

 

ஆளுநர் உரைக்குப் பின் பேரவைத் தலைவர் அப்பாவு உரையாற்றினார். அதன்பின் தமிழக முதல்வர் பேசுகையில், “உரையை முறையாக ஆளுநர் படிக்கவில்லை. இது விதியை மீறிய செயலாகும். சட்டமன்ற விதி எண் 17-ஐ தளர்த்தி இன்று அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தையும்....'' என முதல்வர் வாசிக்க, அங்கிருந்து விறுவிறுவென எழுந்து நடந்து தமிழக ஆளுநர் வெளிநடப்பு செய்தார். அவையின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்