Published on 30/05/2019 | Edited on 30/05/2019
![bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/fbDT0zRLix-StqlMV0_Qmb2doiMdjx_R5Lc1DflYphE/1559201606/sites/default/files/inline-images/274_0.jpg)
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் யாருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் யாருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று கடும் போட்டி நிலவியது.இந்த நிலையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்குமாருக்கு டெல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.இதனால் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கப்படும் என்று தகவல் வந்து கொண்டிருக்கிறது.இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சரவையில் இடம் பெரும் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர் என்பது குறிப்படத்தக்கது.