Published on 17/12/2020 | Edited on 17/12/2020
![nainar nagendran press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/iqLlmuTBSR4eR2grbXFxtukLPWDRcTw1urgRYkVKIuw/1608186504/sites/default/files/inline-images/th_483.jpg)
முன்னாள் அமைச்சரும், தற்போதைய பா.ஜ.க. மாநில துணை தலைவர்களுள் ஒருவருமான நயினார் நாகேந்திரன், நேற்று நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கூட்டணி கட்சியான அ.தி.மு.க எவ்வளவு சீட்கள் தருகிறதோ அவற்றை வாங்கிக்கொள்ளுவோம். சீட் கேட்பதும் கூட்டணி பற்றி பேசுவதும் தலைமையின் முடிவு. எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவும், தி.மு.க.வில் கலைஞரும் உயிருடன் இருந்தனர். தற்போது இரண்டு பெரிய தலைவர்களும் இல்லை. மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.