





Published on 11/04/2025 | Edited on 11/04/2025
எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமியர்கள் இன்று சென்னையின் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் ஜும்ஆ சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இன்று 11.04.2025 தொழுகை நடந்து முடிந்த பிறகு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஸ்ஜித்களின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.