Published on 28/08/2020 | Edited on 28/08/2020

போஸ்டருக்கு புகழ் பெற்ற மதுரையில் எப்போதுமே நடிகர் நடிகைகளின் ரசிகர்களோ, கட்சித் தலைவர்களின் தொண்டர்களோ பரபரப்பாக போஸ்டர்களை ஒட்டி பேசுபொருளாக்குவார்கள். அந்த வகையில் இப்போது நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரின் திருமண நாளை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் எம்.ஜி.ஆர் போன்றும், அவரது மனைவி சங்கீதா ஜெயலலிதா போலவும் போஸ்டர்களில் படங்கள் உள்ளன. மேலும் புரட்சி தலைவரே, புரட்சி தலைவியே என்ற வாசகமும் உள்ளன. மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த போஸ்டர்கள் மதுரை நகர் எங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.