தமிழக்தில்நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் என தேர்தல் பரபரப்பில் அணைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழல் இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 65-வது பிறந்தநாள் ஆனால் எந்த வித ஆடம்பரம், கொண்டாட்டம் இல்லாமல் ஒரு முதல்வர் பிறந்தநாள் இருந்தது.
இதன் பின்னணி என்னவென்று விசாரித்தபோது தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சி மாற்றம், ஆட்சி கவிழ்ப்பு என்ற சூழல் வரலாம் என்று எடப்பாடியும், அதிமுகவினரும் யோசிப்பதால் நேற்றைய தினம் பிறந்த நாள் விழா கொண்டாடவில்லை என்று செய்தி பரவியது.பிறந்த நாள் அன்று, திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தில் இருந்ததால், கழக நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் அமைச்சர்கள் தரப்பிலிருந்து யாருமே பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதால் அது தேர்தல் பணிகளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றுகூட நினைத்திருக்கலாம் என்கிறது அதிமுக தரப்பு. இன்னொரு தரப்பில், எந்த பத்திரிகையிலும் வாழ்த்து சொல்லி விளம்பரம் தர வேண்டாம் என்று முதல்வர் தரப்பே கேட்டு கொண்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எடப்பாடி மீது நிறைய பேருக்கு அதிருப்தி இருப்பதால் அவர்களில் பெரும்பாலானோர் தினகரன் பக்கம் போகவும் ஆலோசித்து வருகிறார்கள் என்றும், எதையாவது வாழ்த்து சொல்லி விளம்பரம் போட்டால் அது பின்னாளில் பாதிப்பை தந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார்களாம். இந்த நிலையில் முதல்வருக்கு ஆதரவான அந்த 4 அமைச்சர்கள் மட்டும்தான் வாழ்த்து சொன்னார்களாம். வேறு யாருமே பிறந்த நாளில் ஆர்வம் காட்டவில்லையாம். இதை விட அதிர்ச்சி என்னவென்றால் கூட்டணியில் உள்ள யாருமே முதல்வருக்கு வாழ்த்து சொல்லவில்லை. தமிழிசை மட்டும்தான் முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதனால் தேர்தல் முடிவுகள் வந்தால்தான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்.இந்த நிகழ்வு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.