Published on 03/03/2021 | Edited on 03/03/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், தி.மு.க.- ம.தி.மு.க. இடையே தொகுதிகள் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மார்ச் 6- ஆம் தேதி ம.தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூட்டம் கூடுகிறது.
இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ம.தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். மார்ச் 6- ஆம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்த முழுமையான தகவல் தெரியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.