



Published on 22/07/2021 | Edited on 22/07/2021
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர் இல்லத்தில் காலைமுதல் அதிகாரிகள் சோதனை நடத்திவந்த நிலையில், பிற்பகம் 12 மணி அளவில் அவரது இல்லத்திற்கு பிரிண்டர் மெஷின் மற்றும் ஆவணம் படுத்துவதற்கான சில பொருட்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.