Published on 15/03/2022 | Edited on 15/03/2022
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் திருப்பிய அனுப்பிய விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். வரும் 18ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், அது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் நீட் விலக்கு மசோதா குறித்தும் ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்த முறை நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்குறுதி கொடுத்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.