கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அதன் பகுதியாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கள் விருப்பத்தை முதலமைச்சர் மூலம் செயல்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுவும் எடப்பாடியிடம் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் தான் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை மீண்டும் சீனுக்குக் கொண்டு வந்தாலும், மருத்துவ உபகரணக் கொள்முதல் விவகாரத்தில் அவரை எடப்பாடி முழுசாக ஒதுக்கி வைத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பதில், மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரான உமாநாத் ஐ.ஏ.எஸ்.சைக் கொள்முதல் விவகாரத்தைக் கவனிக்கச் சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து உமாநாத்தும் தலைமைச்செயலாளர் சண்முகமும் சேர்ந்துதான் பர்சேஸ் விவகாரங்களை கையாண்டு, சகல விதத்திலும் முதல்வர் எடப்பாடி திருப்தியடையும் வகையில், டீலிங்கை கடைபிடிக்கிறார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
ஆனால், உமாநாத் மூலம் அதிகவிலைக்கு ரேபிட் கிட் பர்சேஸ் செய்தது சர்ச்சையானதோடு, தரமற்ற கருவியால் பரிசோதனையும் நின்று போய்விட்டதாக சொல்லப்படுகிறது. இது எடப்பாடிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னை பர்சேஸ் விவகாரத்தில் ஒதுக்கியதால், அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு தான், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சித் தரப்புக்குக் கசியவிட்டிருக்க வேண்டும் என்று எடப்பாடி சந்தேகப்பட்டதாக சொல்லப்படுகிறது. காரணம், திருவள்ளூர் தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மூலம் தி.முக. தரப்பிலும் நெருக்கமான தொடர்புகளை வளர்த்து வைத்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். இதற்கிடையே, எடப்பாடி உத்தரவுப்படி ஸ்டாலினின் புகார்களுக்கு விஜயபாஸ்கர் பதிலடி கொடுக்க, ஸ்டாலினோ, குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று அட்டாக் அறிக்கை கொடுத்தார். விஜயபாஸ்கரை பக்கத்திலே வச்சிருந்தாலும் தள்ளி வச்சாலும் தன் இமேஜ் பாதிக்கப்படுவதால் எடப்பாடி செம கடுப்பில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.