Skip to main content

திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் சபாநாயகர் தனபால்!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
dhn


ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமியின் ஈரோடு வீட்டிற்கு இன்று காலை 11 மணிக்கு திடீரென வருகை தந்தார் அதிமுகவைச் சேர்ந்த சபாநாயகர் தனபால். அவருடன் ஈரோடு அதிமுக எம்.எல்.ஏவான தென்னரசு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
 

dhn



கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முத்துச்சாமியின் மனைவி காலமானார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட மாநில அமைச்சர்கள், அதிமுகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் சபாநாயகர் தனபாலுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததால் வரவில்லை என்றும் துக்கம் விசாரிக்கவே முத்துச்சாமி வீட்டிற்கு வந்ததாகவும் அதிமுவினர் கூறினார்கள்.
 

 

 

முத்துச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்த தனபால் இருவரும் சுமார் 10 நிமிடங்கள் உள் அறைக்கு சென்று தனியாக பேசினார்கள். அதிமுகவின் சட்டமன்ற சபாநாயகரான தனபால் திமுக மாவட்டச் செயலாளர் வீட்டிற்கு வந்தது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

d


மேலும் முத்துச்சாமி முன்பு அதிமுகவில் இருந்தபோது சீனியர் லீடராக இருந்தார். அந்த அடிப்படையிலே அவரது மனைவி இறப்பிற்கு முதல்வரில் இருந்து சபாநாயகர் வரை நேரில் வந்தார்கள் என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கனகராஜ் அண்ணனை கஸ்டடியில் எடுக்கிறது தனிப்படை! 

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

Court permission to take Kanagaraj's brother Dhanapala  for five days custody

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேல்விசாரணை நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கில் முக்கிய நபராக பார்க்கப்படும் கனகராஜ், மர்மமான முறையில் பலியானார். தற்போது, அது தொடர்பாக கனகராஜின் சகோதரர்கள் தனபால் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர்மீதும் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் என 201, 211, 404 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, தனிப்படை போலீசார் சேலத்தில் வைத்து  கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட இவர்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் கூடலூர் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்துவரும் கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன், உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் தங்களது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் (27.10.2021) மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சஞ்சய் பாபா, கனகராஜின் சகோதரர் தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க  அனுமதி அளித்தார். 

 

 

Next Story

உகாண்டா செல்கிறார் தமிழக சபாநாயகர்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

தமிழக சபாநாயகர் தனபால் நாளை அதிகாலை 03.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் விமானம் மூலம் உகாண்டா செல்கிறார். அந்த நாட்டின் தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள 64- வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக பிரதிநிதியாக பங்கேற்கிறார்.

TAMILNADU ASSEMBLY SPEAKER DHANPAL GOING TO UGANDA COUNTRY

நாளை தொடங்கும் மாநாடு செப்டம்பர் 27- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் அந்த நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சபாநாயகர் தனபால், உகாண்டா பயணத்தை முடித்து கொண்டு அக்டோபர் 11- ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.