Published on 01/04/2020 | Edited on 02/04/2020
கரோனா விவகாரத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட தேவையில்லை என்று முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். அதே போல் கரோனா விஷயத்தில் எடப்பாடியோட புரோகிராம், பேச்சு, பிரஸ்மீட் எல்லாத்தையும் ப்ளான் செய்வது சுனில் டீம்தான் என்கின்றனர். ஏற்கனவே மு.க.ஸ்டாலினோடு இணைந்திருந்தவர் சுனில். தற்போது எடப்பாடி பக்கம் சேர்ந்து, அவர் தரும் ஐடியாக்கள் மக்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகுறதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. முடிந்தவரை முயற்சிகளை மேற்கொள்வோம். அதன்மூலம் மக்களிடம் நல்ல பெயர் எடுப்போம் என்பதுதான் சுனில் டீமின் ப்ளான் என்று கூறுகின்றனர்.
மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், துறை அதிகாரிகளும் தனியாக வரிந்துகட்டி நின்ன நிலையில், இவர்களோடு பேரிடர் மேலாண்மைத் துறை பொறுப்பையும் வைத்திருக்கும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும், வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சையும் முதல்வர் எடப்பாடி களமிறக்கி விட்டிருக்கிறார். முக்கிய மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று சோதனைகளை நடத்தும் வேலைகளும் நடக்க ஆரம்பித்துள்ளது என்று சொல்லப்படுகிறது.