
ஏழை மக்களின் குரல்வளையை நசுக்கி, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிற அரசுதான் மத்தியில் ஆளும் பாஜக மோடி அரசு. இந்த அரசின் ஒவ்வொரு திட்டங்களும் சாமானிய மக்களை மிகவும் பாதிக்கிறது. அப்படி ஒன்றுதான் இப்போது கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதா, இந்த மசோதா நிறைவேறினால் ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கும். விவசாயிகளுக்கும் நெசவாளர் களுக்கும் இலவச மின்சாரம் இல்லாமல் போகும். ஒரு கட்டத்தில் மின்சாரம் தனியார் மயமாகும். ஆகவே இந்த மின்சார திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றக்கூடாது என ஈரோட்டில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் திருமதி சுப்புலட்சுமிஜெகதீசன் தலைமையில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத செயல்பாடுகளை நடத்தி வருகிறது எனவும் அதைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு எம்.பி. ம.தி.மு.க. கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.