தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை லால்குடி பகுதியில் தன்னுடைய 17வது நாள் பிரச்சாரத்தை தொடங்கி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு முன்பாக பொதுமக்களிடமும் தொண்டர்களிடமும் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர், “என்னை தொடர்ந்து கைது செய்து தி.மு.க.வின் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவிய காவல்துறைக்கு என்னுடைய நன்றி.
மிகப்பெரிய எழுச்சியைப் பார்க்கிறேன் சுமார் 2, 3 மணி நேரம் மக்கள் எனக்காக காத்து இருக்கிறார்கள். நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் யார் வரவேண்டும் என்று. ‘உங்களுடைய தாத்தா செய்ததும்; அடுத்து உங்களுடைய அப்பா செய்யப்போகிறது நீங்கள் உறுதிப்படுத்துங்கள்’ என எல்லா கோரிக்கைகளையும் மக்கள் உரிமையாக கேட்கிறார்கள்.
பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய ஒரு கட்சி ராஷ்ட்ரிய லோக் சந்திரிகா என்று கட்சி, அமைச்சரவையில் இருந்து விலகி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 50 விவசாயிகள் இறந்துள்ளனர். எனவே, நாங்கள் ராஜ ஹோமம் செய்கிறோம் என்று வெளியேறி விட்டனர்.
எடப்பாடி, என்றும் படிப்படியாக வளர்ந்து வரவில்லை. தவழ்ந்து தவழ்ந்து வந்தார். அதிலும் நாற்காலி மேஜை என்று ஒவ்வொன்றுக்கு புகுந்து வந்தவர். மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு என்ற வகுப்புகளுக்கு எல்லாம் பொதுத்தேர்வு நடத்துகின்றனர்.
ஆனால் இந்த அடிமைகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்து நீட் தேர்வை உள்ளே நுழைய விட்டு போனதை தொடர்ந்து கொலை செய்கிறனர். அதற்கு உதாரணம் தான் அனிதா. அந்த மாணவியின் மரணம் என்றும் அழியாத நினைவுகளாக இருக்கிறது.
மற்றொரு மாணவர் விக்னேஷ், அவருடைய வீட்டுக்கு நான் சென்றபோது என்னுடைய கையை பிடித்து அவருடைய தந்தை, ‘இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். என்னால் செலவு செய்து தனித்தனி பயிற்சி கொடுத்து அனுப்ப முடியாது. அதற்கான வசதி என்னிடம் இல்லை. எனவே, ஸ்டாலினிடம் கூறி இதை ரத்து செய்ய முயற்சி எடுங்கள்’ என்று கூறினார்
.
கண்டிப்பா தி.மு.க. தலைவர், ஒரு சட்டப் போராட்டத்தை நடத்தி நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார். எஸ்.பி.வேலுமணி, எல்.இ.டி.பல்பு வாங்குவதில் ஊழல், ஜெயகுமார் வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல் என எல்லாவற்றிலும் ஒரு ஊழல்.
ஊழல் பட்டியலில் கையில் வைத்துக்கொண்டுதான் பா.ஜ.க., சி.பி.ஐ. வைத்து மிரட்டி வருகிறது. எனவே அவர்களுக்கு பயந்து தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
சூரப்பாவின் மீது 700 கோடி ரூபாய் ஊழல் வழக்கு உள்ளது. ஆரம்பத்திலிருந்தே தலைவர் ஸ்டாலின் அவரை வேண்டாம் என்று கூறினார்.
1996ல் திருவரங்கத்தை வெற்றி பெற்றோம். மே மாதம் நடக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்த திருவரங்கம் தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி, எந்த தொகுதியில் நின்றாலும் நாம் தோற்கடிக்க வேண்டும்.
தி.மு.க. தலைவர் விரைவில் ஒரு வெற்றி கூட்டணியையும் வெற்றி வேட்பாளர்களையும் அறிவிப்பார். அவருடைய வாக்குறுதிகளுக்கு காத்திருங்கள், அவருடைய அறிவிப்பை செயல்படுத்துங்கள்.
எந்த அ.தி.மு.க. காரர்களாக இருந்தாலும் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி, ஜெயலலிதா எப்படி இறந்தாங்க என்பதே. இதை கேளுங்கள், அவர் ஓடி விடுவார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது எல்லா அமைச்சர்களும் நேரில் சென்று பதவி ஏற்கும் போது தேம்பித் தேம்பி அழுதவர்கள், ஜெயலலிதா இறந்த பிறகு ஒருவர் கூட அழவில்லை.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு கட்சியினுடைய தலைவர் அவருடைய இறப்பில் நிற்கக்கூடிய சந்தேகங்களை கேட்பதற்கு கூட அ.தி.மு.க.வால் முடியவில்லை. ஒரு அடிப்படை தொண்டன்கூட அதற்கான கேள்வி எழுப்ப முடியவில்லை.
கோவில் பழுதடைந்து உள்ளது எனவே மறுசீரமைக்கவும், ஒரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை தலைவரிடம் முன்வைக்கிறேன்” என்று பேசினார்.