2019 மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், அம்மா வறுமை ஒழிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த வலியுறுத்தப்படும். அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1500 நேரடியாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும. தமிழகத்தின் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.
தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு திட்டம் மூலம் உள்நாடு, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தமிழகத்தன் வறட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை அதிமுக அரசு வலியுறுத்தும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.