
‘சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், சட்டமன்ற தொகுதி வாரியாக நவ. 12ஆம் தேதி நடக்கிறது. திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது’ என சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், சட்டமன்ற தொகுதி வாரியாக நவ. 12ஆம் தேதி நடக்கிறது. திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது.
எம்.பி.க்கள் கவுதம சிகாமணி, எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, தம்மம்பட்டி, தெடாவூர், வீரகனூர் ஆகிய பேரூர்களுக்கு காலை 9 மணிக்கு நடுவலூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் கூட்டம் நடக்கிறது.
ஆத்தூர்:
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் நகரத்திற்கு காலை 10 மணிக்கு டிஜிஆர் திருமண மண்டபத்திலும், நரசிங்கபுரம், கீரிப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு பகல் 12 மணிக்கு புத்திரகவுண்டன்பாளையம் கண்ணைய ஆசாரி திருமண மண்டபத்திலும் கூட்டம் நடக்கிறது.
ஏற்காடு:
ஏற்காடு தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளுக்கு மதியம் 2 மணிக்கு வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடக்கிறது.
வீரபாண்டி:
வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி, மல்லூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளுக்கு அன்று மாலை 4 மணிக்கு நெய்க்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.
சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள், பொறுப்புக்குழு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.