கும்பகோணத்தில் தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அமுமுகவின் சொல்வாக்கும் செல்வாக்கு சரிந்து வருகிறதா என கேட்டகப்பட்டதற்கு." அமமுக வின் செல்வாக்கு மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. அம்மாவின் உண்மையான தொண்டர்களால் பாதுகாக்கப்பட இயக்கம் அமுமுக தான். நீங்கள் இந்த கேள்வியை கேட்பது எதற்காக என்று எனக்கு தெரியும் யாரோ சிலர் தங்களது சுயநலத்திற்காக வெளியேறுவதால் இந்த இயக்கத்திற்கு எந்த பாதிப்பும் எப்போதும் எங்கேயும் ஏற்படாது.
வருங்காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் தமிழகத்திலே மாபெரும் சக்தியாக விளங்கும். வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். இதை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள்.யாரோ ஒருவர் செல்வதால் செல்வாக்கு குறைந்துவிடுமா என்ன. செல்லுபவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்சப்படும். அமுமுக இன்றைக்கு அல்ல, என்றைக்குமே செல்வாக்காக இருக்கும்."என்றார்.
அவரிடம் தமிழகத்தில் இந்தி தினிப்புக்குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு. " மத்திய உள்துறை அமைச்சர் இந்தி மொழியை பற்றி பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தின் முதல்வராக இருந்த அண்ணாவால் இருமொழிக் கொள்கை பற்றி தமிழகத்தில் பேசப்பட்டுள்ளது. மேலும் இந்தி தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் கிடையாது, ஆனால் அதனை மக்கள், மாணவர்கள் விரும்பி கற்றால் எதுவும் இல்லை. திணிப்புதான் தவறு. இந்தி திணிப்பில் காங்கிரஸ் செய்த பெரிய தவறு பிஜேபிக்கு தெரியும். இந்தி மொழி தமிழ்நாட்டில் திணிக்க மாட்டார்கள் என்பதுதான் எனது கருத்து."என்றார்.