Skip to main content

நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வளவு பெரிய ஆபத்து... சோனியா காந்தி குறித்து எச்.ராஜா சர்ச்சை கருத்து! 

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

bjp

 


அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது 'லடாக்' மற்றும் 'சிக்கிம்' ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் படைகளைக் குவித்து வரும் சூழலில், எந்த மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி சீன அதிபர் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
 


இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு அந்நியர் இந்திய அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதில் சோனியா அணியினர் பாகிஸ்தான் பக்கம் இருப்பதாக தனியார் செய்தி நிறுவன விவாத நிகழ்ச்சி ஒன்றை ஷேர் செய்துள்ளார். எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்