Skip to main content

''மக்கள் மீது திமுகவிற்கு அக்கறையில்லை'' - அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில்

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

 '' DMK does not care about the people '' - OPS reply to the Minister

 

கடந்த 17ஆம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கொச்சியிலிருந்து பெங்களூரு வரை எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டு பகுதியான ஓசூர் அருகே கெலமங்கலத்தில் விளைநிலங்களில் குழி தோண்டப்பட்டு, எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுவதைத் தமிழ்நாடு முதல்வர் தடுத்து, விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலை ஓரம் இந்த எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தற்போது விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை உடனே கைவிட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

 

 '' DMK does not care about the people '' - OPS reply to the Minister

 

நேற்று (19.07.2021) ஓபிஎஸ்-ஸின் அறிக்கைக்குத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருந்தார். அதில், ''அதிமுக ஆட்சியில்தான் கெயில் நிறுவனம் கிருஷ்ணகிரியில் எரிவாயு குழாய் பதித்தது. உண்மை இதுவாக இருக்க, எதுவும் அறியாததுபோல் ஓபிஎஸ் அறிக்கை விடுகிறார். தற்போது புதிதாகச் செயல்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்கெல்லாம் சாத்தியக்கூறு உள்ளதோ அவ்விடங்களில் எல்லாம் சாலையின் ஓரத்தில் குழாய் பதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்திருந்தார்.

 

 '' DMK does not care about the people '' - OPS reply to the Minister

 

இந்நிலையில் திமுகவுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். அதில், ''கிருஷ்ணகிரியில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அதிமுக மீது கண்டனம் தெரிவிப்பதா? பிரச்சனையைச் சுட்டிக்காட்டியதற்காக கண்டனம் தெரிவிப்பது மக்கள் மீதான அக்கறையின்மையைக் காண்பிக்கிறது. ஆட்சியிலுள்ளபோது ஒரு திட்டத்தை ஆதரித்து, ஆட்சி போன பிறகு அதற்கெதிராக போராடுவது திமுகவின் இரட்டை நிலை. கிருஷ்ணகிரி விவசாயிகளைச் சந்தித்து எரிவாயு குழாய் பதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்