Published on 20/01/2023 | Edited on 20/01/2023
மதுரை வந்த அமைச்சர் உதயநிதியை அதிமுக முக்கியப்புள்ளி சந்தித்தது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை துவக்கி வைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மதுரை அலங்காநல்லூர் வந்திருந்தார்.
இந்நிலையில், மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினை மதுரை மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா சந்தித்தது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோலைராஜா நேரடியாக திமுகவை கடுமையாக எதிர்த்தாலும் மறைமுகமாக நெருக்கம் காட்டுகிறார் என்ற புகார் கடந்த சில நாட்களாக அதிமுகவில் பேசுபொருளாக உள்ள நிலையில், தற்போது சோலைராஜா - உதயநிதி சந்திப்பு அதிமுகவினுள் கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
மறுபுறம் சோலைராஜா திமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில், இதற்கு சோலைராஜா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.