Skip to main content

அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்...பதட்டமான எடப்பாடி...மீண்டும் கூவத்தூர்?

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

முதல்வர் எடப்பாடி வெளிநாடு போயிருக்கும் நேரத்தில் ஆளுங்கட்சி எம்.எல். ஏ.க்கள் ரகசிய கூட்டம் நடத்தியதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் தமிழக அரசியலில் நடைபெற போகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவியது. பின்பு இது பற்றி விசாரித்த போது, அதிமுகவை சேர்ந்த 8 அமைச்சர்களும், 15 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடிக்கு எதிராக மகாபலிபுரத்தில் ரகசியமாக  எல்லாரும் சேர்ந்து செயல்பட போகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் பரவியது, ஆளும்கட்சித் தரப்பை பதட்டமாக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் நடந்த உண்மை நிலவரம் வேறு என்கிறாரக்ள் நெருங்கிய வட்டாரங்கள்.
 

admk



அதாவது, பல்லவர் காலக் கலைச் சிற்பங்களைப் பார்வையிட சீன அதிபர் ஜின்பிங், இங்க இருக்கும் மாமல்லபுரத்துக்கு அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் வர இருப்பதாக தகவல் வெளியாகின. அப்போது அவரும் பிரதமர் மோடியும் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இரு நாட்டு உறவுகளும் வலுப்பட சில ஒப்பந்தங்களிலும் கையெழுத்துப் போட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதனால் தமிழக அரசின் குழு ஒன்று, இப்போது இருந்து மாமல்லபுரம் சென்று, சீன அதிபர் தங்கவதற்கு இடத்தையும் அவர் பார்வையிடப் போகும் பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த சிலர், மந்திரிகள் ரகசியமாக சந்திப்பு என்று சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பி விட்டுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்