Skip to main content

மெட்ரோ ரயிலால் வாகன உற்பத்தி குறைவு அதிமுக அமைச்சர் பதிலால் அதிர்ச்சி! 

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

கடந்த 70 ஆண்டுகளில் நாம் இந்த வகையான பணப்புழக்க சூழ்நிலையை எதிர்கொண்டதே இல்லை. முழு நிதித்துறையும் மாபெரும் சிக்கலில் உள்ளது. தனியார் துறையின் சில அச்சங்களை அகற்ற மத்திய அரசு  தன்னால் முடிந்த அனைத்தையும் உடனே செய்ய வேண்டும் என பொருளாதார நெருக்கடி குறித்து நிதி ஆயோக்  துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறினார். மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் 2030ம் ஆண்டுக்கு பிறகு மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. 
 

admk



இதன் காரணமாக மோட்டார் வாகன தொழிற்சாலைகள் மூடும் அபாய நிலையக்கு தள்ளப்பட்டு உள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.பி.சம்பத், இந்தியாவில் மெட்ரோ ரயில்களின் வரவால் ஆட்டோ மொபைல் மற்றும் வாகன உற்பத்தி குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் வாகன உற்பத்தி துறையில் தொழிலாளர்களின் வேலை பாதிக்காத சூழ்நிலையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்