Skip to main content

அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டும் தி.மு.க... அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

admk


அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளைத் தீவிரப்படுத்தும் விதத்தில் தி.மு.க. எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், முதல் ஆளாகக் களத்தில் இறங்கியுள்ளார் என்று சொல்கின்றனர். 
 


இது பற்றி விசாரித்த போது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வேண்டியவர்களின் கட்டுமான நிறுவனமான சாய் பில்டர்ஸ், இந்த கரோனா காலத்திலேயே வீட்டு வசதித்துறையின் 300 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டரை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான அத்தனை ஆவணங்களையும் திரட்டியிருக்கிறார் தி.மு.க. ராஜ்யசபா எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான வில்சன். 

இந்த நிலையில், அமைச்சரோ, தகவல்கள் எல்லாம் யார் மூலம் எதிர் முகாமுக்குப் போனது என்று தன் தரப்பில் இருக்கும் அத்தனை பேரையும் சந்தேகப்பட்டு விசாரித்து வருகிறார் என்கின்றனர். ஓட்டுநராக இருந்த முருகனை வேலையை விட்டு நிறுத்தியவர், அடுத்து தனது பாதுகாப்பு அலுவலரான சக்திவேலையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அடுத்து வந்த பாதுகாப்பு அலுவலர் ரகுராமன் மீதும் சந்தேகப்பட்ட அமைச்சர், புதுக்கோட்டைக்குப் போகும் போது, நடுவழியிலேயே இறக்கி விட்டுச் சென்றார் என்று சொல்கின்றனர். 


 

 

சார்ந்த செய்திகள்