திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தேசிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், "திமுக, இந்து விரோத கட்சி அல்ல என மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். சமயபுரத்துக்கு ஸ்டாலின் பால் குடம் எடுக்கும் வரை இதனை நான் நம்பமாட்டேன். தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார் ஸ்டாலின். சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். இதனைத்தான் விரும்புகிறார் ஸ்டாலின் என்றும் கூறியிருந்தார்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/Vee2r9lZXcxu9Y2Ae6QqMdfuP8rF6vhnpN3RtPt_Rbg/1583239166/sites/default/files/inline-images/661_1.jpg)
இந்த நிலையில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபத்தில் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சியைக் கலைப்பது என்பது கருக்கலைப்பு போன்று நினைத்து விட்டார்களா எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.