Published on 13/05/2019 | Edited on 13/05/2019
கடலூர் அதிமுக உறுப்பினர் சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியாதாக கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர்மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 4 வாரத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.