Skip to main content

தேர்தல் நடத்தை விதிமுறை; அரசியல் கட்சி கொடிகள், சின்னங்கள் விற்பனை மந்தம்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

erode east by election election commission strict action sellers issue 

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி வரும் 7 ஆம் தேதி வரை செய்யப்படுகிறது. மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியத்திற்குள் முடிவு தெரியவரும்.

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை விநியோகிப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கார்களில் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் கட்சிக் கொடிகளையும் அகற்றி வருகின்றனர். திமுக கூட்டணிக் கட்சி தலைவர், அதிமுக கூட்டணிக் கட்சியினர் தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று வாக்காளர்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு கட்சியினர் முகாமிட்டு தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

 

ஈரோடு மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி. ரோடு போன்ற கடை வீதிகளில் தேர்தலை ஒட்டி அதிமுக, திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அ.ம.மு.க உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரின் கட்சிக் கொடிகள் சின்னங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அதிகாரிகள் கெடுபிடியால் அரசியல் கட்சி கொடிகள், சின்னங்கள் விற்பனை மந்த நிலையில் உள்ளது. அனுமதி இன்றி வாகனங்களில் கட்டி வரப்படும் அரசியல் கட்சியினரின் கொடிகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்