Published on 22/06/2020 | Edited on 22/06/2020

இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபுறம் சீன ராணுவம் தனது படைகளைத் தயார்படுத்தி வருகிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தயாராகி வருகிறது.
இந்நிலையில், இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் கூறியதற்கு சீன பத்திரிகை பாராட்டு தெரிவித்து இருந்தது. அதை மேற்கோள் காட்டியுள்ள ராகுல் காந்தி, மோடியை சீனா புகழ்வது ஏன், நமது வீரர்களை கொன்றதுடன், நம் நிலத்தை அபகரிக்கும் சீனா, பிரதமர் மோடியை புகழ்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.