Skip to main content

துரத்தும் கரோனா... ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் 175 பேருக்கு மட்டுமே அனுமதி!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

gf

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. 

 

இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பூஜைகளில் ஈடுபட்டு வந்த பிரதீப் தாஸ் என்ற மதகுரு ஒருவருக்கு கரோனா இருப்பது சில தினங்களுக்கு முன்பு உறுதியானது. ராமர் கோயிலில் தினசரி பூஜைகளைச் செய்யும் நான்கு முக்கிய மதகுருக்களில் இவரும் ஒருவர் ஆவார். இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுதவிர அயோத்தியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த 16 காவலர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அயோத்தியில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டும் விழாவுக்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் நண்பகல் 12:30 மணிக்கு வருவார் எனக் கூறப்படுகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்