உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை ஷித்தல் ராஜ் எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார். இவருக்கு வயது 23 ஆகும். மிக குறைந்த வயதில் ஒரு இளம் பெண்ணாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு ஷித்தல் ராஜ் மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளார். கடந்த ஆண்டில் கஞ்சன் ஜங்கா மலைப்பகுதியில் சிகரத்தைத் தொட்டு நிகழ்த்தப்பட்ட சாதனை நேற்று அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனையடுத்து சாதனை பெண் ஷித்தல் ராஜூக்கு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்தர் சிங் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ஷித்தல் சிறு வயது முதலே மலையின் உயரம் தன்னை கவர்ந்ததாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நான்கு வருடம் இமய மலையேறும் பயிற்சியைப் பெற்றேன். அதிகாலை 3.30 மணிக்கு இமய மலை சிகரத்தை எட்டியதை நினைவு கூர்ந்த ஷித்தல் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை என்பதால் விடியும் வரை காத்திருந்தேன். அதன் பின் தான் இமயமலை சிகரத்தை எட்டியதை நன்றாக உணர்ந்தேன். ஒருபுறம் நேபாளம் , மற்றொரு புறம் இந்தியா , முன்னாள் சீனா என கண்ட காட்சிகள் மறக்க முடியாது என இவ்வாறு ஷித்தல் கூறினார்.