Published on 30/01/2019 | Edited on 30/01/2019
தனது மனைவி அவரது பாட்டியை பார்க்க சென்றுவிட்டு 10 நிமிடம் வீட்டிற்கு தாமதமாக வந்ததால் கணவன் தலாக் கூறிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. முத்தலாக் சொல்வது சட்டப்படி தவறு என்று மத்திய அரசு மசோதா நிறைவேற்றியுள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் உடல்நிலை சரி இல்லாத தனது பாட்டியை பார்த்து விட்டு அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வருவதாக தனது கணவனிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் கூறிய நேரத்தை விட 10 நிமிடம் தாமதமானதால் அவருக்கு போன் செய்த அவரது கணவன் மூன்று முறை தலாக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது தொடர்பாக தற்போது பெண்கள் நல வாரியத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.