உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 7000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/g3AIDh9CUI7NH2Y79-Rli5IJZSTkInvRseBYVDbIhT4/1586614710/sites/default/files/inline-images/cdfg.jpg)
இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லால் அகர்வால் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதில், இதுவரை 1.7 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் நடத்திருப்பதாகவும், நேற்று மட்டும் 16, 564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஊரடங்கு இல்லாமல் கரோனா தடுப்பு நடவடிக்கை மட்டும் எடுத்திருந்தால் ஏப்ரல் 15ம் தேதிக்குள் 1.2 லட்சம் பேர் இந்த கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.