
பயிற்சியின் போது பளு தூக்கும் வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது யாஷ்டிகா ஆச்சார்யா. இவர், ஜூனியர் தேசிய பளு தூக்கும் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவர். இவர் பளு தூக்கும் பயிற்சியினை பெற்று வந்தார்.
இந்த நிலையில், வழக்கம் போல் இன்று அவர் 270கி எடைக் கொண்ட கம்பியை தூக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். யாஷ்டிகாவின் பயிற்சியாளர் அவர் மீது அந்த கம்பியை விட்ட போது எடையைத் தாங்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், 270கி எடை கம்பி அவர் மீது விழுந்தது. இதில், அவரது கழுத்து உடைந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது,