
20 வயது நர்சிங் மாணவி ஒருவர், தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், காசர்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (20) என்ற நர்சிங் மாணவி. இவர், கடந்த 2024ஆம் ஆண்டு வைசாக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வைசாக், வளைகுடாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். நிகிதாவை, அவரது கணவர் வைசாக் மனரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிகிதா தனது கணவரின் வீட்டில் உள்ள படுக்கறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிகிதா இயற்கைக்காக மாறாக இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.