Published on 24/04/2019 | Edited on 24/04/2019
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 அன்றே பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் வரை மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜீவாலா கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், "மே 23 ஆம் தேதி அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் விலையை ஏற்றுக்கொள்ளலாம் என மோடி அவர்களிடம் கூறியது பற்றி ஏன் மக்களிடம் கூற மறுக்கிறார். எல்லாவற்றையும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி இதனை பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை. மக்கள் தெளிவானவர்கள், அவர்களை ஏமாற்ற முடியாது" என பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு மாதகாலமாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீ விலையில் பெரிய அளவு மாற்றம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.