Skip to main content

வங்கி வாடிக்கையாளர்களுக்கான 'ஆட்டோ டெபிட்' சேவை! - சிக்கலை ஏற்படுத்தும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

credit card

 

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பலரும், ஆட்டோ-டெபிட் என்ற சேவைக்கு அனுமதியளித்திருப்பார்கள். இதன்மூலம் வங்கிக் கணக்கிலிருந்து, அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்கான கட்டணம் தானாகவே சென்றுவிடும். இதன்மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணம் செலுத்தாததால், சேவைகள் தடைப்படும் நிலையைத் தவிர்க்க முடியும்.

 

இந்தநிலையில், ரிசர்வ் வங்கி, ஆட்டோ-டெபிட் முறைக்குப் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இப்புதிய விதிகளின்படி, ரூபாய் 5 ஆயிரத்திற்குள்ளான கட்டணங்கள் ஆட்டோ- டெபிட் முறையில் செலுத்தப்பட வேண்டுமென்றால், சேவையை அளிக்கும் நிறுவனங்கள் ஐந்து நாட்களுக்கு முன்னரே வாடிக்கையாளர்களுக்கு 'மெசேஜ்' அல்லது 'மெயில்' மூலமாக நோட்டிஃபிகேஷனை அனுப்ப வேண்டும். அந்த நோட்டிஃபிகேஷனுக்கு வாடிக்கையாளர் அனுமதியளித்த பின்னரே, ஆட்டோ-டெபிட் மூலமாகப் பணப்பரிமாற்றம் நடைபெறும். 

 

மேலும், ரூபாய் 5 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டணம் என்றால், 'ஒன்-டைம் பாஸ்வேர்டு' முறையில் வாடிக்கையாளர் அனுமதியளித்த பிறகே, வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வேண்டும். இதனால் வங்கிகள், தங்கள் தொழில்நுட்பத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ-டெபிட் சேவை மூலம் நிறுவனங்களுக்குப் பணம் செல்வது தாமதமாகலாம் எனக் கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்