ஜம்மு காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் மற்ற கல்விக்கூடங்களில் பகவத் கீதை மற்றும் ராமயாணத்தை உருதுவில் மொழிபெயர்த்து கல்வி பாடத்திட்டத்தில் இணைத்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த சர்ச்சையை அடுத்து உடனடியாக அந்த திட்டத்தை திரும்ப பெறப்பட்டது.
இத்திட்டம் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அலோசகர் பி.பி. வையாஸ் அறிவுறுத்தலின் பேரில் கொண்டுவரப்பட்டது. ராமாயணத்தையும் பகவத் கீதையையும் உருதுவில் மொழிபெயர்த்து கல்விகூடங்களில் கட்டாய பாடத்திட்டமாக சேர்ப்பதாக அறிவித்தார். அக்டோபர் 22ஆம் தேதி இந்த திட்டம் ஆளுநர் ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீரிலுள்ள அனைத்து கல்விகூடங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இது சம்மந்தமான சுற்றறிக்கையும் ஜம்மு மாநிலத்திலுள்ள அனைத்து கல்விதுறை அதிகாரிகளுக்கும், கல்வி துறைகளுக்கும் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, பாஜகவின் கீழ் இருக்கும் இந்த மாநிலத்தில் ஏன் ஒரு சார்பு மதத்தை மட்டும் கல்வி சிறுவர்கள் கற்க வேண்டும், ஏன் குரானை கற்கக்கூடாது. குரானையும் அதில் சேர்த்திருக்கலாமே என்று சமூக ஆர்வலர் ராஜா முஜப்பார் பாட் கூறினார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, ட்விட்டரில் இதை கடுமையாக விமர்சித்து, தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். இந்த திட்டம் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இசுலாமிய மக்களின் மனதில் ஹிந்த்துத்வாவை விதைக்க இவ்வாறு மத்திய அரசு செயல்பட்டுள்ளது என்றனர். பின்னர் இத்திட்டத்தை அறிவித்த உடனேயே வாபஸும் பெற்றுவிட்டது ஆளுநரின் அரசு.