Published on 05/02/2022 | Edited on 05/02/2022

சீறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், இனி டயாலிசிஸ் செய்து கொள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியதில்லை. இனி அவர்கள் வீடுகளிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்து கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரள முதல்வரின் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இனி, நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளலாம். வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொள்ள வசதியாக கேரள சுகாதாரத்துறை 11 மாவட்டங்களில் புதிய பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது" என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சேவை இலவசம் என்றும், விரைவில் மீதமுள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் கேரள முதல்வர் அலுவலகம் தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளது.