உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஆரம்பத்தில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,286 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 91 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 12,464 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த வாரம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.