Skip to main content

எல்.ஐ.சி வாங்கிய ஐ.டி.பி.ஐ வங்கியின் புதிய பெயர்...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

ii

 

ஐடிபிஐ வங்கி மற்றும் எல்.ஐ.சி இரண்டுக்குமான வர்த்தகப் பேச்சு வார்த்தை கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடந்துவந்தது. அதன்பிறகு  கடந்த ஆகஸ்ட் மாதம், ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்க எல்.ஐ.சி நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை அளித்தது.

 

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளைக் கைப்பற்றி ஐடிபிஐயின் பெரும்பான்மை பங்குதாரராக எல்.ஐ.சி இருக்கிறது. 

 

 

இதனை தொடர்ந்து தற்போது ஐடிபிஐ வங்கியை எந்த பெயரில் இயக்குவது எனும் கட்டத்திற்கு இந்த விவகாரம் நகர்த்திருக்கிறது. நேற்று நடந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் அதில் முதலில் எல்.ஐ.சி வங்கி எனும் பெயர் முன்மொழியப்பட்டது.

 

அதன் பின் மீண்டும் எல்.ஐ.சி ஐ.டி.பி.ஐ வங்கி எனும் பெயரும் முன்மொழியப்பட்ட்டுள்ளது. விரைவில் இந்த இரண்டு பெயர்களில் ஒரு பெயரை தாங்கி ஐ.டி.பி.ஐ வங்கி இயங்கும்.

 

 

 

சார்ந்த செய்திகள்