உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளியில் நீச்சல் பயிற்சியாளர் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் சுராஜ்புரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சியாளர்க பணியற்றவந்தவர் காந்திதாஸ்.

கடந்த வியாழக்கிழமை மாலை நீச்சல் பயிற்சியின் போது நீச்சல் பயிற்சிக்கு வந்த வந்த 4 வயது சிறுமியை பலவந்தமாக பாலியல் கொடுமை செய்துள்ளான். இதை அறிந்த பெற்றோர்கள் சுராஜ்புர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதனை தொடர்ந்து காந்திதாஸை போலீசார் கைது செய்யதுள்ளனர். நான்கு வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் கொடுமை செய்த கொடூரன் காந்திதாஸுக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் எனவும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தநாத் இதுபோன்ற பாலியல் குற்றச்செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கண்டன குரல்கள் எழுப்பிவருகின்றனர்.