உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாக குறைத்து தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரம் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த சூழலில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரம் இடங்களை நிரப்ப கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு பூஜ்ஜியமாக நிர்ணயித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஆயிரம் சிறப்பு மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணமாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ. 2.5 கோடி முதல் 2.5 கோடி வரை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டில் நீட் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான மதிப்பெண்ணை 20 சதவீதமாக தேசிய மருத்துவ ஆணையம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.