Published on 12/12/2018 | Edited on 12/12/2018
5 மாநில வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, ஆட்சி அமைப்பது குறித்த திட்டங்களை வகுத்து வருகின்றன வென்ற கட்சிகள். இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணி கட்சி 26 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் தலைவரான 84 வயது சொரம்தங்கா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க போகிறார். ஏற்கனவே 1998 முதல் 2008 வரை இவர் முதல்வராக இருந்தார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இவர் , மிசோரம் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலுக்கு கொண்டுவரப்படும் என்றும், மேலும் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு போக்குவரத்து விரிவுபடுத்தப்படும் எனவும் கூறினார்.