கரோனா பரிசோதனை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐ.சி.எம்.ஆர். அதன்படி, கரோனா உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ளவர்கள் தவிர அறிகுறி இல்லையென்றால் மற்றவர்கள், கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை.
மாநிலங்களுக்கு இடையே உள்ளூர் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை அவசியமில்லை. வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்கள், கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதில்லை. இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறி இருப்பவர்களும், கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த இணைநோய் இருப்பவர்களும், சர்வதேச பயணிகளும் கட்டாயம் கரோனா பரிசோதனை உட்படுத்தப்பட வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.