Published on 12/12/2018 | Edited on 12/12/2018
மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி மதியம் 12 மணிக்கு ஆளுநரை சந்திக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 114 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியினர் இன்று மதியம் 12 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர். பெரும்பான்மையை பெற 116 இடங்கள் என்ற தேவை என்ற நிலையில் 114 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் கொண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தந்துள்ளது.
இது பற்றி மாயாவதி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனினும் நாங்கள் காங்கிரஸ்க்கு ஆதரவு தருகிறோம். ஏனென்றால் பா.ஜ.க அரசு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை, எனவேதான் காங்கிரஸ்க்கு ஆதரவு தருகிறோம் என கூறினார்.