டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் சந்தித்தார். மத்திய பிரதேச மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலவர் கமல் நாத் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் மாநில வளர்ச்சிக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும் என பிரதமரிடம் கமல்நாத் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பங்கேற்காமல் இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் கமல்நாத் மீது அதிருப்தியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமருடன் கமல்நாத் சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில அரசியல் சூழ்நிலை தற்போது சரியில்லாத நிலையில் பிரதமருடன் மத்திய பிரதேச முதல்வர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.