குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது.
இது குறித்து குடியரசுத் தலைவரின் இணை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் அமிர்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்திற்கு அம்ரித் உத்யன் என குடியரசுத் தலைவர் புதிய பெயரை சூட்டியுள்ளார்.
அம்ரித் உத்யன் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்து இருக்கும். இம்முறை ஜன.31 முதல் மார்ச் 26 வரை இரு மாதங்களுக்கு திறந்திருக்கும். மேலும் விவசாயிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பிரத்யேகமாக சில நாட்கள் ஒதுக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில், “அமிர்த காலத்தில் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியில் வருவது அவசியமான ஒன்று. அதன்படி, அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியேறும் மோடி அரசின் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு இது” எனக் கூறியுள்ளார்.