![Husband who issue wife on parole; 4 arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/zVcqF_cQRSF9U3tblLUz0Dp9M-8Mz36788TVxPn1BGU/1669214465/sites/default/files/inline-images/n22182.jpg)
புதுச்சேரி அனிதா நகரைச் சேர்ந்தவர் பிரபல தாதா கருணா. ஆயுள் தண்டனை கைதியான இவர் சிறையில் உள்ளார். இவரது தம்பி பாஸ்கர், இவரும் ஒரு கொலை வழக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு கைதாகி தண்டனை பெற்று வந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆண்டு நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
பாஸ்கரின் மனைவியான எழிலரசி கடந்த 9 ஆண்டுகளாக மாயமானார். இதுதொடர்பாக அவரது உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் எழிலரசியின் கணவர் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் பரோலில் வெளியே வந்தபோது தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது நண்பர்களான பிரகாஷ், கருப்பு சரவணன், பாம் வேலு ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு காரிலேயே கழுத்தை நெரித்து கொலை செய்து வேல்ராம்பட்டு ஏரிக்கரை அருகே அவர் முன்பே தோண்டி வைத்திருந்த குழியில் புதைத்தது தெரிய வந்தது.
![Husband who issue wife on parole; 4 arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/cKmWcee6lMc7pelSoGG5xpLxv6crYuHGsi_p0rUyPvo/1669214487/sites/default/files/inline-images/n22181.jpg)
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக புறவழிச்சாலை பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அதில் பீதியடைந்த பாஸ்கர், எழிலரசியை புதைத்த இடத்திற்குச் சென்று அவரது எலும்புக் கூடுகளை ஏரிக்கரையில் தூக்கி எறிந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து 4 பேரை கைது செய்த போலீசார், பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.