பா.ஜ.கவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்ஸே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
மஹாராஷ்ட்ர பாஜகவில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்ஸே, 30 ஆண்டுகள் அக்கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில், அமைச்சராக இருந்த ஏக்நாத் கட்ஸே மீது கடந்த 2016-ம் ஆண்டு, நிலஅபகரிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வென்று, பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழலில், அதற்குக் காரணம் தேவேந்திர பட்நாவிஸ்தான் எனத் தொடர்ந்து விமர்சித்து வந்தார் ஏக்நாத்.
மேலும், பா.ஜ.க தலைவர்கள் பலர் மீதும், அவர் அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்தச் சூழலில், பாஜகவில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார் ஏக்நாத். இதனைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார் ஏக்நாத் கட்ஸே.